(கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும்)
2024-25-ஆம் ஆண்டு 24வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ள நிபந்தனைகளின்படி பயிற்சியாளர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையத்தளவழியாக விண்ணப்பிக்கவும், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பயிற்சிக் கட்டணம் ஆகியவை இணையத்தளத்தில் செலுத்துவது தொடர்பாகவும், குழுவின் ஒப்புதல் (Scrutiny Committee) பெறுவது தொடர்பான விவரம் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.
கீழ்கண்டுள்ள தலைப்புகளின்படி பயிற்சி கட்டணம் வசூலிக்கப்படும்.
பயிற்சிக் கட்டண விவரம் | வசூலிக்கப்பட வேண்டிய தொகை (ரூ) |
---|---|
விண்ணப்பப் படிவம் (ம) பதிவுக் கட்டணம் | 100 |
கற்பிப்புக் கட்டணம் | 8,500 |
நாட்குறிப்பு கட்டணம் | 300 |
எழுதுபொருட்கள் கட்டணம் | 600 |
தேர்வு கட்டணம் (ம) சான்றிதழ் கட்டணம் | 2,000 |
புத்தக கட்டணம் | 2,000 |
நூலக காப்பீடு தொகை (திரும்ப வழங்க வேண்டியது) | 300 |
தபால் கட்டணம் | 200 |
கூட்டுறவு, கூட்டுறவு முரசு (ம) ஜெர்னல் ஆப் கோ-ஆப் இதழ்களுக்கான சந்தா | 500 |
விளையாட்டுக் கட்டணம் | 150 |
கணினி பயிற்சி கட்டணம் | 1,500 |
நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சி கட்டணம் | 4,550 |
அடையாள அட்டை கட்டணம் | 150 |
மொத்தம் | 20,850 |
கட்டணம் செலுத்தும் முறை:
புதிய பாடத்திட்டத்தின்படி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி பயிற்சியாக இரு பருவ முறையில் பின்வரும் பாடப்பிரிவுகளில் தமிழில் பாடம் நடத்தப்பட்டு, வகுப்பறை பயிற்சிகள் மற்றும் செய்முறை பயிற்சிகள் நடத்தப்படும்.
இறுதித் தேர்வினை தமிழில் மட்டுமே எழுத வேண்டும். இப்பயிற்சியில் கீழ்க்கண்ட பாடங்கள் பயிற்றுவிக்கப்படும்.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் நடத்தும் இறுதித் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும், 40 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்கள் அந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படுவார்கள்.
பாடம் 1 முதல் 9 வரை எழுத்து தேர்வில் குறைந்த பட்சம் 30 மதிப்பெண்களும் மற்றும் அக மதிப்பீடு (Internal) குறைந்தபட்சம் 10 மதிப்பெண்களும் சேர்த்து மொத்தம் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள். பாடம் 10 ல் மட்டும் எழுத்து தேர்வில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களும் மற்றும் அக மதிப்பீடு (Internal-10 மதிப்பெண்கள், களப்பயிற்சி மேற்கொண்டதற்காக 10 மதிப்பெண்களும் சேர்த்து (10 + 10=20) குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களும் சேர்த்து மொத்தம் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள்.
தகுந்த சான்றிதழ்கள் மற்றும் விவரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.
குறிப்பு: இணையத்தளத்தின் வழியாக விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் 06.05.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும். அதற்கு பின்னர் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பங்கள் மேற்கூறிய நிபந்தனைகளுக்குட்பட்டு, தக்க சான்று நகல்கள் இணைக்கப்பட வேண்டும், அவ்வாறு இல்லையெனில் அவை நிராகரிக்கப்படும்.
குழுவின் பரிசீலனைக்கு நேரில் வருகை தரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (பத்தாம் வகுப்பு உட்பட) இரு சான்றொப்பம் பெற்ற நகல்களையும் (Two copies with attested) கொண்டு வர வேண்டும்.
பயிற்சிநிலைய முதல்வர் ஒப்புதல் பெற்ற பின்னரே பயிற்சி நிலையத்தில் உள்ள QR CODE-ஐ பயன்படுத்தி மட்டுமே பயிற்சி கட்டணத்தினை செலுத்த படவேண்டும்.